
நீராட சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
-நுவரெலியா நிருபர்-
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த மூவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலையை சேர்ந்த என்.ஜீ டிலிப்ப கமகே (வயது – 14) என்ற சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
சடலமானது பிரேத பரிசோதனைக்காக தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பலான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிசார் முன்னெடுத்து வருன்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
