
நீண்ட விடுமுறைக்கு பின்னர் பாடசாலையை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பேருவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றில் ரூபா 780, 000க்கு அதிககமான கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் வழங்கிய முறைப்பாடையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீண்ட வார பாடசாலை விடுமுறைக்காக பாடசாலை மூடப்பட்டிருந்த நிலையில் பாடசாலையின் நல்லிணக்க கூட்டத்திற்காக பாடசாலை உதவியாளர் பாடசாலையை திறக்க வந்த போது ஆசிரியர் ஓய்வறை திறந்திருப்பதை அவதானித்ததையடுத்து திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொலைபேசி மூலம் அதிபருக்கு தெரிவித்ததையடுத்து அதிபரால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன கணினிகள் 2021ஆம் ஆண்டு கொரிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டவை எனவும் ஒரு கணினி ரூபா 60 ஆயிரம் என்ற வகையில் மொத்த கணினிகளின் பெறுமதி 7 இலட்சத்து 80 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
