நீங்கள் ஸ்னேப்சாட் பயன்படுத்துபவரா? எச்சரிக்கை

பின்லாந்து நாட்டில் பிர்கன்மா என்ற பகுதியைச் சேர்ந்த போதை பொருளுக்கு அடிமையான ஜெசி நிகோ கிறிஸ்டின் எர்கோனென் (வயது – 27) சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி சிறுமிகளை குறிவைத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நடவடிக்கைகளில் இவர் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார்.

ஸ்னேப்சாட் சமூக வலைத்தளம் மூலம் 12 முதல் 17 வயது சிறுமிகளை குறிவைத்து அவர்களுக்கு ரெக்வஸ்ட் கொடுத்து பழகத் தொடங்கியுள்ளார். அவர்களிடம் ஆசையாக பேசி பார்ட்டி தருகிறேன் நேரில் சந்திக்கலாம் எனக் கூறியுள்ளார்.

இவரின் பேச்சை நம்பி வலையில் விழுந்த சிறுமிகளிடம் அத்துமீறி பாலியல் உறவுகளில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், சில சிறுமிகளிடம் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை கொடுத்து அவர்களையும் போதை பழக்கத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பல சிறுமிகளிடம் அவர்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்து அதை ஸ்னேப்சாட்டில் அனுப்புங்கள் எனக் கேட்டு வாங்கியுள்ளார். இவ்வாறு 11 வயது சிறுமி உட்பட பல சிறுமிகளிடம் புகைப்படங்கள், பாலியல் வீடியோக்களை பெற்று அவர்களை பிளாக்மெயில் செய்யும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேக நபர் மீது பாடசாலை மாணவிகள் 10 பேர் முதலில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் இவரை கைது செய்து விசாரித்ததில் 120 சிறுமிகளிடம் இத்தகைய பாலியல் குற்றங்களில் அவர் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

 

குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்றம் 10 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.