நிவாரண உதவி பணிகளை முன்னெடுக்க மாளிகைக்காடு- சாய்ந்தமருது அமைப்புகள் களத்தில்!

நாட்டின் பல பாகங்களில் சீரற்ற காலநிலை, அதனோடு இணைந்த வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமான மனிதாபிமான நிவாரண உதவி பணிகளை முன்னெடுக்க சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜம்மியதுல் உலமா சபை, சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்புகள், சாய்ந்தமருது-மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக சங்கம், ஊடகவியலாளர்கள், இதர சிவில் சமூக அமைப்புகள், நலன்விரும்பிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து நிவாரண சேகரிப்பு பணிகளை கடந்த இரு நாட்களாக முன்னெடுத்து வருகிறார்கள்.

அனைவரது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு சாத்தியமான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக பிரதேச பொதுமக்களிடம் இருந்து நிவாரண உதவிகளை சேகரிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் உள்ள மக்களும், நாட்டிலுள்ள மக்களும் நிறைய உதவிகளை இந்த பணிக்காக வழங்கி வருகிறார்கள்.