நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம்: அமெரிக்கா கவலை

இலங்கையில் புதிதாக நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் அமெரிக்கா நேற்று முன் தினம் புதன்கிழமை தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன் போது அவர் இந்தச் சட்டமூலமானது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எடுத்துக்காட்டினார்.

மேலும் இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் சாத்தியமான தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று தூதுவர் சங் கூறினார்.

அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது என்று தெரிவித்துஇ சட்டமூலத்தை கடுமையாக விமர்சிக்கும் சிவில் சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவர் தனது கவலையை தெரிவித்தார்.