நாளை முதல் வலுவிழக்கும் றீமால் சூறாவளி
றீமால் சூறாவளியின் தாக்கம் நாளை வியாழக்கிழமை முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே மழையுடனான வானிலை காரணமாக 10,483 குடும்பங்களைச் சேர்ந்த 39,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை 8 மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்