நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச, மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையவுள்ளன.

அத்துடன் இம்மாதம் 24ஆம் திகதி முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும் முஸ்லிம் பாடசாலைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகளுக்காக ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்