நாய் மற்றும் பூனைகளுக்கு சொத்தை எழுதி வைத்த தாய்
சீனாவில் வயதான பெண்மணி தனது 2.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்து மற்றும் பணத்தை தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக தனது அன்புக்குரிய பூனைகள் மற்றும் நாய்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக சவுத் சைனா மோர்னிங் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஷாங்காய் நகரைச் சேர்ந்த ஓரை என்ற இந்த வயதான பெண், தனது 2.8 மில்லியன் டொலர் சொத்து தனக்குப் பிறகு தனது மூன்று குழந்தைகளுக்குப் பங்கிடும் வகையில் தனது கடைசி உயிலை எழுதி வைத்தார்.
இருப்பினும், அவர் மனம் மாறி தான் சேமிக்கும் பணம், தான் அன்புடன் வளர்க்கும் மற்றும் நேசிக்கும் பூனைகள் மற்றும் நாய்களின் நலனுக்காகச் செல்லும் என்று கூறியுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்