நாமலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை குறித்த உத்தரவை பிறப்பித்தது.
ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாக கூறி இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நம்பிக்கை மோசடி செய்ததாகக் கூறி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.