நான் மனிதப்பிறவி அல்ல கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் – மோடி

நான் மனிதப்பிறவி அல்ல கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் பொது அவர் இவ்வாறு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு அவர் தெரிவிக்கையில்,

பிரதமர் மோடி நான் மனிதப் பிறவி அல்ல,  என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மா தான்.

பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை, ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.

நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது.

அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்