நாதனோடை அணைக்கு ஆபத்து ஏற்படும்: செல்வராசா கஜேந்திரன்

– திருகோணமலை நிருபர் –

வெருகல் மாவடிச்சேனையிலுள்ள நாதனோடை அணைக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வை தடுக்குமாறுகோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் செயற்பாட்டாளர்களால் ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முறைகேடான மண்அகழ்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது பொய்வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறேசா ஜானகி பெர்ணான்டோபுள்ளே என்ற நபருக்கு வழங்கப்பட்டுள்ள மண் அகழ்வு அனுமதியால் அப்பகுதியை சூழவுள்ள 9 கிராமங்களில் வசிக்கும் சுமார் 13000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளை ஏற்க பொலீசார் தொடர்ந்து மறுத்துவருவதுடன், மக்களை அச்சுறுத்தி ஒடுக்கும் செயற்பாட்டில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகிறார்கள்.

தமிழர் தாயக நிலப்பரப்புகள் ஒருபுறம் சிங்களவர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில்இ தமிழர் தாயக இயற்கை வளங்களும் சிங்களவர்களால் ஆக்கிரமிப்புக்கு ப்ளாக்கர் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாதனோடை அணைக்கு ஆபத்து ஏற்படும்: செல்வராசா கஜேந்திரன்

நாதனோடை அணைக்கு ஆபத்து ஏற்படும்: செல்வராசா கஜேந்திரன்