
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை அதிக வெப்பத்துடனான கால நிலை நிலவுமென வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலைமை மக்களின் சுகாதார நிலைமைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதுடன் போதியளவு நீரை அருந்துதல், அவசியமின்றி வெயிலில் நடமாடுவதை தவிர்த்தல் போன்ற ஆலோசனைகளை பின்பற்றுமாறும் நீண்டநாள் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
