நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது

நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் டீசலும் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் பெட்ரோலும் கையிருப்பில் உள்ளதாக, கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்தார்.

மேலும் பெட்ரோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை அண்மித்துள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து எந்த வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.

இன்றும் நாளையும் விடுமுறை தினங்களாக இருக்கின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்