
நாட்டின் பொருளாதார சிக்கலால் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ள சிறுவர்கள்
நாட்டின் 10 சிறுவர்களில் ஒருவர் ஆவேசத் தன்மையுடன் செயற்படுவதாக சேவ் த சில்ரன் (Save the children) அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் 3 குடும்பங்களில் ஒரு பிள்ளையின் செயற்பாடு மாற்றத்துடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் மாதம், நாட்டின் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 2,300 குடும்பங்களை உள்ளடக்கி சேவ் த சில்ரன் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
எரிவாயு, மின்சாரம், எரிபொருள், உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு முதலான காரணங்களால், சிறுவர்கள் மனஅழுத்தத்துடன் இருக்கின்றார்கள், அதனால் ஐந்து சிறார்களில் ஒருவரின் உறங்கும் பாணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இத்தகையை தாக்கங்கள் சிறார்களின் மனநலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதென அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.