“நாட்டின் புதிய ஆட்சிக்கான மக்களின் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு

-யாழ் நிருபர்-

நாட்டின் புதிய ஒரு ஆட்சி மலர்வதற்கான மக்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பு (சொண்ட்) ஏற்பாடு செய்த கருத்தரங்கு திருமறைக்கலாமன்றக் கலைக்கோட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இவ் கருத்தரங்கில் நாட்டின் புதிய ஆட்சியை ஏற்படுத்துவதற்கான பொருளாதார அரசியல் நிர்வாகம் மற்றும் சட்டத்துறை ஆகியவற்றில் என்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும், என வளவாளர் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டது.

சட்டத்துறை மாற்றங்கள் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் கோசலை மதன், பொருளாதார மாற்றங்கள் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, நிர்வாக மாற்றங்கள் தொடர்பில் முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் மற்றும் அரசியல் விமர்சகர் செல்வின் ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

கருத்தரங்கில் புத்திஜீவிகள், மதத்தலைவர்கள் கலந்துகொண்டு தமது அபிப்பிராயங்களை முன் வைத்ததுடன், அவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் வளவாளர்கள் பதில் அளித்தனர்.