நாட்டின் பல இடங்களில் மாலை வேளையில் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை மாலை வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழைவீழ்ச்சி பதிவாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.