
நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் 2023 இல் நாட்டின் ஏற்றுமதி 951.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.
இது சதவீதமாக 11.88% என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 14.94% குறைவு என மத்திய வங்கி குறிப்பிடுகிறது.
இதன்படி, ஆடைகள், இறப்பர் மற்றும் தேங்காய் தொடர்பான பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
