நாடாளுமன்ற அமர்வு இன்று நண்பகலுடன் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் ஆரம்பமானதைத் தொடர்ந்து இடம்பெற்ற  நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, இன்றைய தினத்திற்குரிய செலவுத் தலைப்புகள் நண்பகல் 12.30 மணியளவில் நிறைவேற்றப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 9.00 மணி வரை ஒத்திவைக்கப்படும் என்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.