அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னரே உடனடியாக முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை பாதிக்க ஈரான் முயற்சிப்பதாகவும், ஆனால் அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்தை ஈரானால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே, நீடித்து வரும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.










