
நற்பிட்டிமுனை பள்ளிவாயலுக்கு மின் விசிறிகள் அன்பளிப்பு
-அம்பாறை நிருபர்-
நற்பிட்டிமுனை ஹிக்மா ஜிம்ஆ பள்ளிவாயலுக்கு மின் விசிறிகள் ரிஸ்லி முஸ்தஃபா எடியுகேஷன் எய்ட் அமைப்பின் ஸ்தாபகரும் மெயோன் குரூப் ஆஃப் கம்பெனியின் நிறைவேற்று பணிப்பாளருமான றிஸ்லி முஸ்தபாவினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நற்பிட்டிமுனை லோயர் தோட்டத்தில் அமைந்துள்ள ஹிக்மா ஜிம்ஆ பள்ளி வாயலின் மேல் தளத்திற்கு மின் விசிறிகளின் தேவை தொடர்பில் பள்ளிவாசல் நிருவாகிகள் ஆர்.கே.ஆர் அமைப்பின் ஊடாக ரிஸ்லி முஸ்தஃபா எடியுகேஷன் எய்ட் அமைப்பிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமைய அந்த அமைப்பின் ஸ்தாபகரும்மெயோன் குரூப் ஆஃப் கம்பெனியின் நிறைவேற்று பணிப்பாளருமான றிஸ்லி முஸ்தபாவினால் மிகவும் குறுகிய நாட்களுக்குள் குறித்த மின் விசிறிகளை பெற்றுக்கொடுக்கப்பட்டு பள்ளிவாசல் நிருவாகிகளிடம் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இதன்போது அவ் அமைப்பின் உறுப்பினர்களுடன், பள்ளித் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

