
-யாழ் நிருபர்-
நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள், இன்றையதினம் வெள்ளிக்கிழமை தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர்.
இவ்வாறு விஜயம் செய்த குழுவினர், அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
குறித்த விகாரையானது, தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து, தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், நாளையதினம் சனிக்கிழமையும் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
