நயினாதீவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், நயினாதீவில் 21 கிலோ கிராம் கஞ்சா நேற்று சனிக்கிழமை விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சாவுடன் சந்தேக நபர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் சந்தேக நபரை ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபடிவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்