நடு வீதியில் கவிழ்ந்த லொறி
தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று வியாழக்கிழமை காலை லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து காரணமாக மாத்தறை நோக்கி பயணித்த வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுவெலயிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறியின் பின்பக்க ரயர்கள் வெடித்து விபத்துக்குள்ளானதில் லொறி வீதியின் நடுவில் கவிழ்ந்துள்ளது.
லொறியை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்இ விபத்தில் எவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
