தோல்வியால் நடு வீதியில் அமர்ந்து மொட்டை அடித்த பாஜக நிர்வாகி
தேர்தல் பந்தயத்தில் தோல்வியுற்ற நபர் ஒருவர் நடுவீதியில் அமர்ந்து மொட்டை அடித்துக்கொண்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் கோவையில் பாஜக வெற்றி பெறும் என மாற்றுக் கட்சி நபர்களிடம் பந்தயம் கட்டிய நிலையில், ஒருவேளை பாஜக கோவையில் தோற்றுவிட்டால் அனைவர் முன்னிலையிலும் பஜாரில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொள்வதாக சவால் விட்டிருந்தார்.
தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் பாஜக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், கோவையில் பாஜக தோல்வியைத் தழுவிய நிலையில் பாஜக நிர்வாகி ஜெய்சங்கர் தூத்துக்குடியின் பரபரப்பான சாலையில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்டார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்