தோசையை இப்படி செய்தால் உடல் எடை குறையுமா?

🔸உடல் எடையை குறைக்க ஒரு நல்ல உணவு தோசை. அனைவருக்கும் விருப்பமான காலை உணவுகளில் ஒன்றான தோசை, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.

🔸ஆகவே உடல் எடை குறையவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் இந்த தோசையை வீட்டில் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்

💢கோதுமை ரவை – கால் கிலோ

💢அரிசி மாவு – கால் கப்

💢சீரகம் – அரை டீஸ்பூன்

💢சின்ன வெங்காயம் – 10

 

💢இஞ்சி – சிறிய துண்டு

💢கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

💢காய்ந்த மிளகாய் – 5

 

💢உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

🎇கோதுமை ரவையை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

🎇சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

🎇அதனுடன் ரவையை சேர்த்து சந்று தோசை பதத்திற்கு அரைக்க வேண்டும்.

🎇பின் அரைத்த மாவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்களாவது ஊற வைக்க வேண்டும்.

🎇இறுதியாக தோசை கல்லில் மாவை ஊற்றி, தோசையை ஊற்றி விட வேண்டும். அப்படி செய்தால் சுவையான ஆரோக்கியமான தோசை தயார்.

தோசையை இப்படி செய்தால் உடல் எடை குறையுமா

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்