தொழில் முயற்சியாளர்களுக்கு துரித கடன் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்

-கல்முனை நிருபர்-

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி வங்கியின் அங்கத்தவர்களாகவுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு துரித கடன் வழங்கும் செயற்திட்டம் சிரேஷ்ட ஊடகவியலாளரும், வங்கியின் முகாமையாளருமான ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் மற்றும் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம் ஆகியோரினால் பல்வேறுபட்ட தொழில் துறை முயற்சியாளர்களுக்கு இத்துரித கடன் சேவை வழங்கி ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது.

சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலுக்கமைய சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சௌபாக்கியா இவ்வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸானின் வழிகாட்டல் ஆலோசனையுடன் பல்வேறுபட்ட நலனுதவி வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க