தொழிலதிபரின் வீடு உடைக்கப்பட்டு திருட்டு

உடப்பு, புனவிட்டியவில் உள்ள பிரபல தேங்காய் மற்றும் இறால் பண்ணை உரிமையாளரான தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பெறுமதியான பொருட்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை திருடப்பட்டுள்ளது.

இவர்கள் குடும்பத்துடன் நேற்று ஞாயிற்று கிழமை இரவு வெளியே சென்று இன்று திங்கட்கிழமை காலை வீடு திரும்பியபோது, தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்போது 7 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாகவும் திருடர்கள் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த திருட்டு தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்