தொலைபேசியில் பேசிக்கொண்டு சென்ற இளைஞர்கள் பரிதாபமாக பலி

வெயாங்கொடை வத்துரவ தொடருந்து நிலையத்துக்கு அருகில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைபேசியில் பேசிக்கொண்டு ரயில் பாதையில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

வெயாங்கொடை வத்துரவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த இரு இளைஞர்களின் வீடுகளும் ரயில் மார்க்கத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும், அவர்கள் இன்று காலை சுற்றுலா செல்வதற்கு தயாராகி வத்துரவ ரயில் நிலையத்தை நோக்கி செல்லும் போது கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டே நடந்துசென்றுள்ளனர்.

இந்நிலையில் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் வெயங்கொட ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்