தொலைத்தொடர்பு கோபுரத்தை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள ஏ 35 பிரதான வீதி அருகில் 5ஜிபி தொலைத்தொடர்பு கோபுரம் தற்பொழுது நிறுவப்பட்டு வருவதற்கு மக்கள் பெரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் எமக்கு 5ஜிபி தொலைத் தொடர்பு கோபுரம் தேவையில்லை. இதனை இப்பகுதியில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும். இது எமக்கும் எமது உறவுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எமது சந்ததியையே அழித்துவிடும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தயவு செய்து இப்பகுதியில் இருந்து உடனடியாக கோபுரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக அரசாங்கத்தின் எந்தவித அனுமதியும் பெறவில்லை மற்றும் கிராம சேவையாளரின் அனுமதியும் இல்லை பிரதேச சபையின் அனுமதியும் பெறப்படவில்லை இந்நிலையில் கோபுரம் யாரால் நிறுவப்பட்டது யார் அனுமதித்தது என்பது தமக்குத் தெரியாது உள்ளதாகவும் உடனடியாக தொலைத்தொடர்பு கோபுரத்தை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.