
தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா
-யாழ் நிருபர்-
ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றது.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஒகஸ்ட் 16ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை தேர் திருவிழா இடம்பெற்றதுடன், நாளை வியாழக்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
