ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த சிறுவன்

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற விசேட ரயில் ஒன்றிலிருந்து விழுந்து சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த 15 வயது சிறுவன் தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ரயில் மிதிபலகையில் அமர்ந்து பயணித்தபோது, ​சுரங்கத்தில் மோதி அவர் கீழே விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்