தைராய்டு குணமாக எளிய வழிகள்

தைராய்டு குணமாக எளிய வழிகள்

தைராய்டு குணமாக எளிய வழிகள்

🔷தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும். மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது மற்றும் உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது.

🔷ஒருவேளை இந்த சுரப்பி ஹார்மோன்களை குறைவாகவோ கூடுதலாகவோ சுரந்தால் தைராய்டு நோய்க்கான பிரச்னை உண்டாகிறது. அந்தவகையில் தைராய்டு பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிகளைப் பார்ப்போம்.

🔺முட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் ஆரோக்கியமானது. இத்தகைய உணவுகளில் கால்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது. அதனால் முட்டை மற்றும் பால் பொருட்களை அதிகம் உட்கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சனையைக் குறைக்கின்றது.

🔺இரவில் படுக்கும் முன், ஒரு வெங்காயத்தை இரண்டாக வெட்டி சாறு வெளியே வரும் நிலையில், ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும். இப்படி செய்தால் தைராய்டு பிரச்சனையை குறையும்.

🔺பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றில் கொய்ட்ரஜன் இயற்கை வடிவில் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்க்கும் போது, தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்கும்.

🔺வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, அதிகாலையில் சிறிது நேரம் சூரியக்கதிர்கள் சருமத்தின் மேல் படும்படி நடப்பது ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

🔺மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது.

🔺தானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும். இதனால் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தானிய வகைகளை உணவில் சேர்த்து கொள்ளவது நல்லது.

🔺உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து குணமாகலாம்.

🔺காளானை அதிகளவு சாப்பிட்டு வந்தால் தைராய்டு பிரச்சனை முற்றிலும் சரியாகிவிடும். அதனால் ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது காளான் சாப்பிடுவது நல்லது.

🔺தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வது நன்மையைத் தரும்.

🔺தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அத்துடன் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் காணப்படுகிறது. ஆகவே இந்த உணவை தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்வதால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்

தைராய்டு குணமாக எளிய வழிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்