தையிட்டியில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முரண்பாடு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த போராட்டமானது கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகி நேற்று சனிக்கிழமை வரை நடைபெற்றது.

சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது, அதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததன் பின்னர், போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.