தேவாலயத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்தவர் பெருந்தொகை பணத்துடன் தப்பியோட்டம்
புத்தளம் கத்தோலிக்க தேவாலயமொன்றில் புனர்வாழ்வு பெற்று வந்த இளைஞன் ஒருவர் தேவாலயத்தின் அலுவலக பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த தேவாலயத்தின் சிறுவர் திட்ட முகாமையாளர், புத்தளம் காவல்நிலையத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதிக போதைப்பழக்கத்திற்கு அடிமையான குறித்த இளைஞன் கொழும்பில் வசிப்பவர் என்றும் தனக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என தேவாலயத்திற்கு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் அலுவலகத்திற்குள் புகுந்து 4,95000 ரூபா பணத்துடன் தப்பிச்சென்றுள்ளதாக அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பொலிஸார் குறித்த இளைஞனின் வீட்டை சோதனையிட சென்ற போதும், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்