பிள்ளையானின் புகைப்படம் அகற்றப்பட்டது

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பேத்தாழை பொதுநூலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தப்பட்ட தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் புகைப்படம் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய செவ்வாய்க்கிழமை மாலை அகற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பிணக்குகள் தீர்க்கும் பிரிவு தொடர்ச்சியாக செய்துவந்த முறைப்பாட்டின் அடிப்படையில் புகைப்படம் அகற்றபட்டுள்ளது.

வேட்பாளர்களின் புகைப்படங்கள் அரச நிறுவனங்களில் காட்சிப்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தேர்தல்கள் சட்டத்தினை மீறும் வகையில் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பேத்தாழை பொது நூலகத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் புகைப்படம் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்