தேர்தலின் போது இறுதி 3 நாட்களில் கொடுக்கப்படும் சலுகைகள் தான் வாக்குகளை அதிகரிக்கின்றது – ஜனா

தற்போது தேர்தல்கள் ஜனநாயக தேர்தலாக இல்லாது பணநாயக தேர்தலாக இருக்கின்றது, என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மின்னல் செய்திச்சேவையின் “அரசியலின் மறுபக்கம் நிகழ்ச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு கோரப்பட்டு, அதற்கான காலத்தை ஒதுக்குவார்கள். அந்த காலத்தில் எவ்வளவு பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றது என்பதை விட, இறுதி மூன்று நாட்களும் மக்களுக்கு எவ்வளவு சலுகைகள் வழங்கப்படுகின்றது என்பதை பொறுத்தே வாக்குகள் அதிகரிக்கின்றன, என அவர் தேலும் தெரிவித்தார்

நேர்காணலின் முழுமையான காணொளி