தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விடுத்துள்ள எச்சரிக்கை

இன்று June 12 “சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினமாகும்”

ஒவ்வொரு குழந்தையும் கட்டாயக் கல்வி பெறும் உரிமையுடையவர்கள்

சிறுவர்களை தொழிலாளர்களாக யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக, அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது 1929 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறையிடலாம்

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக நிலைமையை கருத்திற் கொண்டு சிறுவர்கள் கூலித்தொழிலாளர்களாக பயன்படுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்காரணமாக சிறுவர்களை பாடசாலைக்கு தொடர்ச்சியாக அனுப்பாமல் இருப்பதற்கான சாதகமான நிலை காணப்படுவதுடன் இதன் காரணமாக பாடசாலைகளை விட்டு இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக் காட்டியுள்ளது.

நாட்டின் தற்போதைய சட்டத்தின்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அவர்களின் வாழ்க்கை, சுகாதாரம், கல்வி அல்லது தார்மீக வளர்ச்சிக்கு ஆபத்தில்லாத பணிகளில் மட்டுமே அமர்த்த முடியும்.

மேலும் அந்த சிறுவர்களை பாதுகாப்பற்ற வேலைகளில் அமர்த்துவதும்,  இரவு நேரங்களில் பணிக்கு அமர்த்துவதும் சட்டவிரோதமானதாகும்.

எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்