தேசிய கல்வியியற் கல்லூரி மாணவி உயிர்மாய்ப்பு: கல்வி அமைச்சு விசாரணை

வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்ற மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு அவசர விசாரணையை ஆரம்பித்துள்ளது.

குறித்த மாணவி மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக தோழிகள் கூறியுள்ளதால், இந்த சம்பவம் தொடர்பில் அவசர விசாரணை நடத்துமாறு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.