
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த இரதோற்சவம்
-யாழ் நிருபர்-
வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹாஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்று இருக்கும் ஸ்ரீ துர்க்காதேவிக்கும் விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களுக்கான விஷேட அபிஷேசக ஆராதனைகள் என்பன இடம்பெற்று வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளி பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம்வந்து இரதோற்சவத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த இரதோற்சவ நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
