தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த தங்கரததிருவிழா
-யாழ் நிருபர்-
வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் நேற்று வியாழக்கிழமை இரவு இரவு தங்கரததிருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
கருவரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ துர்க்காதேவி, விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களுக்கான விஷேட அபிஷேசக, ஆராதனை, என்பன இடம்பெற்று வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளி பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து தங்கரதத்தில் வீற்று வெளிவீதில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்த உற்சவத்தில் நாட்டின் பலபாகங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
