
தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிற்றல் மையம் திறப்பு
-யாழ் நிருபர்-
தெல்லிப்பழை பொது நூலகமானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு , நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குராற்பணம் நேற்று புதன் கிழமை இடம்பெற்றது.
வலி வடக்கு பிரதேச செயளாளர் சு.சுதர்ஜன் தலைமையில் நேற்று காலை 9 மணியளவில் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயளாளர் செல்லத்துரை பிரணவநாதன் கலந்து சிறப்பித்தார்.
ஏற்கனவே செயற்பாட்டிலிருந்த நூலகத்திற்கு வலி வடக்கு பிரதேசபை நிதியில் முகப்பு தோரண வாயில் அமைக்ப்பட்டதுடன், ஆசிய மன்றத்தின் நிதி உதவியுடன் டியிற்றல் அறிவு மையமும் அமைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச சபை ஊழியர்கள் , மாணவர்கள்.மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகெண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



