தென் கொரியாவின் பிரபல பொப் பாடகர் மரணம்
தென் கொரியாவின் பிரபல பொப் பாடகர் மூன்பின் உயிரிழந்த நிலையில் அவரது குடியிருப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் நேற்று முன் தினம் புதன்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டாலும், மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை மறுபரிசீலனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 வயதான மூன்பின் ‘சன்ஹா’ இசைக் குழுவில் பாடகராக பணியாற்றி வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்