“தென்றல்” சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பும்

– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பு கல்லடியில் இருந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் “தென்றல்” சஞ்சிகையின் 60 வது இதழ் வெளியீடும், 50 கலைஞர் கௌரவிப்பும் நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் இடம்பெற்றது.

“தென்றல்” சஞ்சிகை ஆசிரியர் கதிரேசபிள்ளை கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது “தென்றல்” சஞ்சிகையின் 60 வது மலரின் முதல் பிரதியை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவரும் சமூக சேவையாளருமாகிய விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி நூலாசிரியரின் கரங்களில் இருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

60 வது மலர் தொடர்பான அறிமுக உரையை “தென்றல்” சஞ்சிகையின் ஆசிரியர் பீட உறுப்பினர் இ.கோபாலபிள்ளை நிகழ்த்தியிருந்தார்.

இதன்போது நாடளாவிய ரீதியாகத் “தென்றல்” சஞ்சிகையின் வளர்ச்சிக்குத் தமது பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் என 50 பேர் “வீசுதென்றல் விருது” மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றப்பட்டு, “தென்றல்” கொடியேற்றப்பட்டதனைத் தொடர்ந்து “தென்றல்” கீதம் இசைத்தலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

மாணவர்களது கண்கவர் நடனங்கள் இதன்போது அரங்கை அலங்கரித்ததுடன், அதிதிகளின் உரைகளில் 16 வருடங்களை தொட்டுள்ள “தென்றல்” சஞ்சிகையினையும் அதன் ஆசிரியரையும் அனைவரும் பாராட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர், மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர், மூத்த கலைஞர்கள், சஞ்சிகை ஆசிரியரின் உறவினர்கள், அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

"தென்றல்" சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பும்

"தென்றல்" சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பும்

"தென்றல்" சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பும்

"தென்றல்" சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பும்

"தென்றல்" சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பும்

"தென்றல்" சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பும்