தென்னை மரம் பயன்கள்
🟢🟤விவசாயி வளர்க்கும் மரங்களில் தென்னை ஒன்று தான் தினமும் விவசாயிக்கு கைமாறு செய்கிறது.பல வகையான மரங்கள் இந்த பூமியில் இருந்தாலும் அவற்றில் சில வகைகள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு மரத்திற்கும் குறிப்பிட்ட சில மருத்துவ தன்மைகள் இருக்கும். அந்த வகையில் தென்னைமரமும் சிறப்பு மிக்கதுதான். தென்னை மரம் பல நன்மைகளை மனிதனுக்கு தருகிறது. இவற்றின் மருத்துவ பயன்களைப் பார்ப்போம்.
🌴வயிற்று வலியால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோருக்கு இந்த தென்னங்குருத்து ஒரு சிறந்த வரப்பிரசாதம். இதனை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி விரைவிலே குணமாகும். மேலும், வயிற்றில் ஏற்பட்டுள்ள புண்களையும் இது குணப்படுத்தி விடும் தன்மையை கொண்டது.
🌴இன்று பெரும்பாலானோர் சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாதால் அதிக அளவில் உள்ளது. இந்த கற்களை நீக்க தென்னக்குருத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
🌴 உடல் உஷ்ணம் பலருக்கு அதிகமாக இருக்கிறது. இது உடல் நிலையை சீராக வைத்திருக்காது. எனவே பல்வேறு நோய்களுக்கு இதனால் ஆளாக நேரிடும். உடலின் தட்பவெப்பத்தை சமமாக வைக்க தென்னங்குருத்தை சாப்பிட்டு வரலாம்.
🌴தென்னையில் இருந்து கிடைக்கும் இளநீர் ஜீரணமண்டலத்தை வலுப்படுத்த உதவும். நா வறட்சியை போக்கி தாகத்தை தணிக்கிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்சினையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும்.
🌴மாதவிடாய் சம்மந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தென்னங்குருத்து மற்றும் தென்னம்பூ நன்கு உதவுகிறது. தென்னம்பூவை தயிருடன் கலந்து நன்றாக அரைத்து குடித்து வந்தால் மாதவிடாய் வலிகள், தொற்றுகள் குணமாகும். மேலும், மாதவிடாய் சுழற்சியில் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தாலும் விரைவில் சரியாகும்.
🌴இந்த தென்னங்குருத்தை மஞ்ச காமாலை உள்ளவர்களும் சாப்பிட்டு வரலாம். இதனால், மஞ்ச காமாலையின் தாக்கம் அதிகமாக இல்லாமல் பார்த்து கொள்ள இயலும். மேலும், சிறுநீர் வராமல் அவதிப்படுவோருக்கு இந்த தென்னங்குருத்து நல்ல மருந்தாக அமையும்.
🌴தேங்காய் மட்டையை உரித்த பின் கிடைக்கின்ற கடினமான ஓடு போன்ற பகுதி சிரட்டை அல்லது கொட்டாங்குச்சி எனப்படும். இதிலிருந்து அகப்பை செய்து சோறு, கறிகள் எடுப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றது.
🌴பொச்சு மட்டையிலிருந்து பெறப்படும் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது. அதாவது சுருளி எனப்படும் நாரானது கயறு திரிக்க பயன்படுகின்றது.
🌴தென்னை ஓலை குடிசை வீடுகளின் கூரைகளை வேய்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது. வேலிகள் செய்வதற்கும் பயன்படுகின்றது. தென்னை மரத்தின் நீண்ட தண்டுப் பகுதியானது கட்டுமானம் பொருளாகப் பயன்படுகின்றது
🌴தேங்காய் மட்டையை தாவரங்களுக்கு இயற்கை உரமாகவும், தாவர வேர்கள் பற்றிப் பிடிப்பதற்கும் தென்னை மட்டை பயன்படுகின்றது. மாடித் தோட்டங்கள் வைத்திருப்பவர்கள் தென்னம் தும்பையும், மண்ணையும் சேர்த்து சாடியில் பயிர்களை வளர்க்கலாம். பயிர்கள் நன்றாக வளர்வதுடன், பாரமும் குறைவாக இருக்கும்.
தென்னை மரம் பயன்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்