
தென்னை மரத்தின் அடியில் ஆணின் சடலம் மீட்பு
ஹோமாகம, பகுதியில் தென்னை மரத்தின் அடியில் சடலமொன்று இன்று திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
நிக்போட வெல்லவாய வீதி, கல்பன் கொலனியைச் சேர்ந்த ரத்நாயக்க லியனகே சமன் குமார (வயது – 31) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிடிபனவில் உள்ள பசுமை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் கட்ட கட்டுமான பகுதியில் தென்னை மரத்தின் அடியிலேயே இவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவர் நிர்மாண பணியிடத்தில் ஒப்பந்த வேலைகளை செய்து வரும் நிறுவனத்தில் கம்பி வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் புத்தாண்டு விடுமுறை முடிந்து சில நாட்களுக்கு முன்பு பணி நிமித்தம் வந்ததாகவும், ஒப்பந்த நிறுவனம் அந்த நபரிடம் கொடுத்த ஆயிரம் ரூபாயில் முந்நூறு ரூபாயை செலவழித்துள்ளதாகவும் தெரியவந்தது.
இதேவேளை குறித்த நபரின் உயிர் இழப்புக்கான காரணம் இது வரையில் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
