தூதரகத்துக்கு முன்பாக தமக்கு தாமே தீ வைத்துக்கொண்ட நபர்

அமெரிக்கவின் வொஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துக்கு முன்பாக ஒருவர் தமக்கு தாமே தீ வைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தீயணைப்புத் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர் தூதரக அதிகாரிகளுக்கு பரீட்சயமான நபர் அல்லவென இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

தூதரகத்துக்கு அருகிலிருந்து கைப்பற்றப்பட்ட குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் வாகனம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளது. எனினும் அதிலிருந்து ஆபத்தான பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த சம்பவத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த நபரின் செயற்பாடு தொடர்பில் அந் நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்