தூக்கி வீசப்பட்டது முன்பள்ளியின் கூரை

-யாழ் நிருபர்-

மழையுடன் வீசிய வேகமான காற்று காரணமாக மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் ஜே/425 கிராம சேவகர் பிரிவில் உள்ள செபஸ்ரியன் முன்பள்ளியானது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 29.3 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இடியின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்