
துவாரகேஷை நேரில் சென்று வாழ்த்திய முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ், கடந்த 2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில், அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளமையினை முன்னிட்டு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் தமிழ்வண்ணன் துவாரகேசின் இல்லம் சென்று வாழ்த்தியதுடன், அவருக்கான நினைவுச்சின்னம் மற்றும் அன்பளிப்பு பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார்.
இதன் போது, காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், நகரசபை உறுப்பினர் ரஊப் ஏ மஜீட், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச்செயலாளர் றுஸ்வின் முஹம்மட், மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

