துப்பாக்கி சூடு: ஒருவர் மரணம்

கொழும்பு ஹங்வெல்லை, நிரிபொல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

டி-55 ரக துப்பாக்கியாலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் இது வரையில் கண்டு பிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்