துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

கொழும்பு – முகத்துவாரம் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு அருகில் நேற்று செவ்வாய் கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

உணவகத்தில் முகாமையாளராக பணியாற்றிய 51 வயதான ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

காரில் வந்தவர்களால் ரிவோல்வர் வகை துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது காயமடைந்தவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்